HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

'3' படம் எப்படி?

கொலைவெறி புகழ் 3 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் என்று சொல்வதைவிட, தமிழகத்தில்தான் இன்று வெளியானது. உலகின் மற்ற நாடுகளில் நேற்றே ரிலீஸ்!

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்படம், உச்சரிக்காத உதடுகளே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான கொலை வெறிப் பாட்டு இடம்பெற்றுள்ள படம்... ரஜினி, கமல் என பிரபலங்கள் பார்த்துப் பாராட்டிய படம் என்பதால், ஏக எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

தனுஷ் - ஸ்ருதிஹாஸன், சிவ கார்த்திகேயன், சுந்தர் ராமு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. யு சான்றிதழ் பெற்றுள்ளது சென்சாரில்.

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், புற நகரில் 20 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

அனைத்து அரங்குகளுமே கிட்டத்தட்ட ஹவுஸ் புல். ஒரு மீடியம் பட்ஜெட் படத்துக்கு இந்த அளவு ஓபனிங் என்பது மிகப் பெரிய விஷயம். கண்டிப்பாக அடுத்த மூன்று நாட்களில் படத்தின் முதலீடு தேறிவிடும்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. சிலர் துள்ளுவதோ இளமை மாதிரி இருப்பதாகவும், இன்னும் சிலர் மயக்கம் என்ன பாதிப்பு தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

நம்முடைய விமர்சனம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரவிருக்கிறது... அதுவரை, படம் குறித்த உங்கள் கருத்தைச் சொல்லுங்க!     -DINAVIDIYAL!