டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் மொபைல்களைவிட, ட்ரிப்பில் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் மொபைல்கள் குறைவு தான் உள்ளது. ஆனால் இங்கே புதிய ட்ரிப்பில் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் எம்-288 ஸீல் மொபைலை அறிமுகம் செய்துள்ளது எக்சேஜ் நிறுவனம்.
2.2 திரையை கொண்ட இந்த மொபைல், ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அதிகபட்சமாக 1280 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். இதன் சூம் வசதியின் மூலம் புகைப்படத்தினை பக்கத்தில் வைத்து தெளிவாகவும் பார்க்கலாம்.
எம்-288 ஸீல் மொபைலில் உயர்ந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இது 2,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மொபைல்.
இதன் மூலம் 12 மணி நேரம் டாக் டைம் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இப்படி அதிக வசதிகளை வழங்கும் இந்த எக்சேஜ் எம்-288 மொபைல் ரூ.3,915 விலையில் கிடைக்கும்.-DINAVIDIYAL!