ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (டிச. 31) கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. மல்லிகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் பணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை (டிச. 31) காலை 9.30 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு வருவோர், தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள், சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல்கள், தேர்வுக்கூட நுழைவுசீட்டு, மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன், கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் வழங்கிய பணி நியமன ஆணையையும் கொண்டு வர வேண்டும் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. மல்லிகா.
-DINAVIDIYAL!