HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 29 March 2012

ஜெட்ஸ்டார் ஏஷியாவின் புதிய தலைமை நிர்வாகி




எட்டு ஆண்டுகளுக்கு முன் ஜெட் ஸ்டார் ஏஷியா விமானம் தனது சேவையைத் தொடங்க உறுது

ணையாக இருந்தவர்களில் ஒருவர் இப்போது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி ஏற்கவிருக்கிறார். கடந்த மாதம் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகிய திருமதி சோங் பிட் லியானுக்குப் பதில், வரும் ஜூலை மாதம் முதல் 43 வயது திரு பரதன் பசுபதி ஜெட்ஸ்டார் ஏஷியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி யாகச் செயல்படுவார். ஜெட்ஸ்டார் ஏஷியா விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக முன்பு செயலாற்றிய திரு பரதன், 2007ம் ஆண்டில் அவ்விமான நிறுவனத்திலிருந்து விலகி, மத்திய கிழக்கு விமான நிறுவனம் ஒன்றில் இணைந்தார்.
2010ம் ஆண்டில் மீண்டும் சிங்கப்பூர் திரும்பிய பரதன், மெபநாஃப்ட் சிங்கப்பூர் எனும் பெட்ரோலிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு ஏற்றார்.
திரு பரதனை ëஜட்ஸ்டார் ஏஷியா விமான நிறுவனத்துக்குத் திரும்ப அழைப்பதில், அந்நிறு வனக் குழுமத்தின் தலைவர் திரு புருஸ் புக்கனன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முயற்சி செய்தார்.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸŸக்கு சற்று முன்பு திரு பரதன் ëஜட் ஸ்டார் ஏஷியா விமான நிறுவனத் துக்குத் திரும்ப சம்மதித்தார்.


-DINAVIDIYAL!