HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் என்ஜினியரிங் மாணவர் தற்கொலை-சாவில் மர்மம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் என்ஜினியர் மாணவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த தேவராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(24). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. பாடப்பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் உள்ள 19வது பிளாக்கில் தங்கி இருந்த மணிகண்டனின் அறை நேற்று உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

சகமாணவர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அறையில் இருந்த மின்விசிறியில் வேட்டி மூலம் தூக்கு போட்டு மணிகண்டன் தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மணிவண்ணனின் தந்தை செல்வம் 2வது திருமணம் செய்து கொண்டு மனைவியிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு தாயார் காஞ்சனா தான் கூலி வேலை செய்து மணிவண்ணனை படிக்க வைத்தார். நன்றாக படித்த அவர் அண்ணா பல்கலையில் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து எந்த தடயமோ, கடிதமோ சிக்கவில்லை. இந்த நிலையில் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் காஞ்சனா கூறியுள்ளார். இதனால் போலீசார் மணிவண்ணனின் நண்பர்கள், வகுப்பு பேராசிரியர்கள் மற்றும் வார்டன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது மணிகண்டனின் காதலி அவரை ஏமாற்றிவிட்டதாக செல்போனில் மணிகண்டன் குரல் பதிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர். இதனால் மணிகண்டன் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.-DINAVIDIYAL!