HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

இந்தியா - கட்டார் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்து _

அரேபிய வளைகுடா நாடான கட்டார் எமிர் ஷேக் ஹமாட் பின் கலீபா அல்தானி, இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

தலைநகர் புதுடில்லியில் நேற்று அவருக்கு அரச வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், கலீபா அல்தானி இருவரும் இந்தியா, கட்டார் இடையே இருதரப்பு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளுக்கிடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

ரஷ்யா, ஈரானுக்கு அடுத்து உலகின் 3ஆவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் கொண்ட கட்டார், ஆண்டுக்கு 7.7 கோடி டன் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றது. 

எனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் பெற்றோலிய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, கட்டார் எரிசக்தித் துறை அமைச்சர் முகமது பின் சலே அல்சதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்தியாவுக்கான ஏற்றுமதி ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. ஏற்கனவே கட்டாரிடம் ஆண்டுக்கு 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது மேலும் 3 ஒப்பந்தங்கள் இரு நாடுகள் இடையே கல்வி, கலாசாரம், சுற்றுலா மேம்பாடு ஆகிய பிரிவுகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

நிதித்துறையில் தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கியும் கட்டார் மைய வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. 6ஆவது ஒப்பந்தமாக சட்ட விவகாரங்களில் அனுபவம், தகவல் மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ள இந்தியாவும், கட்டாரும் ஒப்புக் கொண்டுள்ளன. -DINAVIDIYAL!