ஆமதாபாத்: குஜராத் மற்றும் மகாராஷட்டிரா மாநிலத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பை, சோலாப்பூர், கோலாப்பூர், நவிமும்பை மற்றும் புனே உள்பட முக்கிய நகரங்கள் அதிர்ந்தன. முதலில் குஜராத்தில் நில நடுக்கம் 4 ரிக்டர் அளவாக இருந்ததால் பெரும் அளவில் பாதிப்பு இருக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் புதன்கிழமை இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கடலோரம் மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதிகள் மிரண்டு போயின. இந்நிலையில் இந்தியாவின் மேற்கு பகுதியில் இன்று காலையில் நிலநடுக்கம், நில அதிர்வு அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது.
குஜராத்தில் கட்ச் பகுதியில் ரிக்டர் அளவு 4 ஆகவும், மும்பை மற்றும் சத்ராவில் 4. 9 ஆகவும் பதிவாகியிருக்கிறது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
கர்நாடகாவிலும் நில அதிர்வு: கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-DINAVIDIYAL!