மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில் விரைவில் இடிக்கப்பட உள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வேத கலாசார மையம் உள்ளது. இந்த மையத்தில் மிகப்பெரிய இந்து கோவிலும் உள்ளது. 49 ஆண்டு கால குத்தகையில் நிலம் வாங்கப்பட்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து வேத கலாசார மையத்தின் தலைவர் சுரன் கரப்பெத்தியான் குறிப்பிடுகையில், "கடந்த 92ம் ஆண்டு இந்த நிலம் 49 ஆண்டு கால குத்தகைக்கு எடுக்கப்பட்டது. ரஷ்யாவிலேயே மிகப்பெரிய இந்து கோவில் இங்கு கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த நிலம், பங்கு சந்தை கம்பெனிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள கோவிலை இடிக்கும் படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டு கோவில் இடிக்கப்படுவதை தடுக்க வேண்டும். ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வடேவிடமும் முறையிட்டு எந்த பலனும் ஏற்படவில்லை என்றார்.
-DINAVIDIYAL!
-DINAVIDIYAL!