HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

போலார்டு "சரவெடி': மும்பை வெற்றி * ராஜஸ்தான் அணி ஏமாற்றம்

மும்பை:
ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "ஆல் ரவுண்டராக' அசத்திய போலார்டு(64 ரன்கள் + 4 விக்கெட்), மும்பை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.இந்தியாவில் ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. 
சச்சின் இல்லை:
விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாததால், மும்பை அணியில் சச்சின் இடம் பெறவில்லை. ராஜஸ்தான் அணியில் பிராட் ஹாட்ஜ் நீக்கப்பட்டு, பிராட் ஹாக் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
மும்பை அணிக்கு ரிச்சர்ட்டு லீவி, சுமன் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். அங்கீத் சவான் ஓவரில் சுமன் ஒரு சிக்சர் அடித்தார். தொடர்ந்து லீவி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டன. சுமன்(10) அதிக நேரம் நீடிக்கவில்லை. பிராட் ஹாக் "சுழலில்' ரோகித் சர்மா(21) வீழ்ந்தார். லீவியும்(29), ஹாக் பந்தில் போல்டானார். 
சிக்சர் மழை:
பின் அம்பதி ராயுடு, போலார்டு சேர்ந்து மிரட்டினர். வாணவேடிக்கை காட்டிய போலார்டு, போத்தா ஓவரில் வரிசையாக இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். திரிவேதி பந்தில் ராயுடு ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. அடுத்து, அங்கீத் சவான் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் போலார்டு. இதே ஓவரில் போலார்டு 64 ரன்களுக்கு(33 பந்தில், 6 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார். தினேஷ் கார்த்திக்(0) ஏமாற்றினார். கடைசி கட்டத்தில் கேப்டன் ஹர்பஜன் தன் பங்கிற்கு இரண்டு சிக்சர் அடிக்க, மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து, இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ராயுடு(47), ஹர்பஜன்(18) அவுட்டாகாமல் இருந்தனர்.
முனாப் மிரட்டல்:
கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கத்தில் "ஷாக்' காத்திருந்தது. முனாப் படேல் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் டிராவிட்(3), கோஸ்வாமி(0) வரிசையாக அவுட்டாகினர். அடுத்த பந்தில் ஓவேஸ் ஷா ஒரு ரன் எடுக்க, முனாப் படேலின் "ஹாட்ரிக்' வாய்ப்பு பறிபோனது. 
ஷா அதிரடி:
பின் ரகானே, ஷா இணைந்து பொறுப்பாக ஆடினர். முனாப் ஓவரில் ரகானே ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். போலார்டு பந்தில் ரகானே(40) அவுட்டானார். மும்பை பந்துவீச்சை ஒருகை பார்த்த ஷா தொடர்ந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாச, போட்டியின் சூடு பிடித்தது. 
மலிங்கா திருப்புமுனை:
இந்த நேரத்தில் 15வது ஓவரை வீசிய மலிங்கா திருப்புமுனை ஏற்படுத்தினார். "யார்க்கராக' வீசப்பட்ட முதல் பந்தில் ஷா 76 ரன்களுக்கு(5 பவுண்டரி, 5 சிக்சர்) போல்டானார். நான்காவது பந்தில் போத்தா(2) அவுட்டானார். முனாப் ஓவரில் சிக்சர் அடித்த கெவான் கூப்பர்(14), அடுத்த பந்தில் போல்டானார். போலார்டு வீசிய போட்டியின் 18வது ஓவரில் மனேரியா(20), சவான்(4), அமித் சிங்(0) அவுட்டாகினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது. மும்பை சார்பில் போலார்டு, முனாப் படேல் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்ட நாயகன் விருதை போலார்டு வென்றார்.-DINAVIDIYAL!