HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 1 April 2012

கரன்டே இல்லை; கட்டணம் அதிகரிப்பு

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மின்வாரியம் செய்திருந்த மனு மீதான விசாரணையை முடித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கட்டண உயர்வு குறித்த, "ஷாக்' அறிவிப்பை நேற்று வெளியிட்டது. மின்வெட்டு காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு 37 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் தேவையை உணர்ந்து அதற்கேற்ற மின் உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் ஆட்சியாளர்கள் துவங்காததால், கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சியில் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல், நகர்பகுதிகள், ஊரகப்பகுதிகளுக்கு மின்வாரியம் மின்கட்டுப்பாட்டு முறையை அறிவித்தது. இதன்படி, மணிக்கணக்கில் அங்கீகரிக்கப்பட்ட மின்வெட்டு அமலாக்கப்பட்டது.தொடரும் மின்வெட்டு:மின்வெட்டு நேரம் நீடித்ததால், குடியிருப்புகள் இருளில் மூழ்கின; தொழிற்சாலைகள் முடங்கிப் போயின; தொழிலாளர்கள் வேலையிழந்து, வாழ்வாதாரத்தைத் தொலைத்தனர். மின்வெட்டு காரணமாக, கடந்த ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி, ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது.தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பின்பும், மின்வெட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. மின்வெட்டிலிருந்து தப்பியிருந்த சென்னை நகரம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் பல மணி நேரம் மின்வெட்டு அமலாகி வருகிறது.இந்நிலையில், மின்சார வாரியம் தனது ஊழியர்களுக்கு சம்பளம்கொடுக்க கூட அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருப்பதாகவும், மின்வாரியத்தை காக்க, மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மின்வாரியம் மனு:இதன் தொடர்ச்சியாக, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான மனுவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளித்தன.சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் பொதுமக்களிடம் ஆணையம் நேரடியாக கருத்துக்களைக் கேட்டது. மின்வெட்டால் இருளில் வாழும் நிலையில், மின் கட்டண உயர்வை அமல்படுத்துவதா என பொதுமக்களும், தொழில் அமைப்புகளும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொங்கி எழுந்தனர். பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், மின்வாரியத்திடமும் விளக்கம் கேட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நேற்று மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.உயர்வு எவ்வளவு?புதிய கட்டணப்படி வீட்டு இணைப்பு வைத்துள்ள பொதுமக்கள் 0-100 யூனிட் வரை உபயோகிப்பவர்களிடம் யூனிட்டிற்கு ரூ. 1.10ம், 100 முதல் 200 யூனிட் வரை உபயோகிப்பவர்களிடம் ரூ. 1.80ம், 200 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகிப்பவர்களிடம் 3.50ம், 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களிடம் ரூ. 5.75ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.மின்உபயோகத்திற்கு ஏற்ப, அடுக்கு முறையில் (சிலாப்)கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டாலும், இந்த உயர்வு பழைய கட்டணத்தோடுஒப்பிடுகையில், 37 சதவீதம் அதிகரிக்கும். புதிய கட்டண உயர்வு, நாளை (ஏப்ரல் 1ம்தேதி) முதல் அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு மூலமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதலாக 7,874 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.யாருக்கு பாதிப்பு:வீட்டு உபயோகப் பொருட்களான குளிர்சாதனப் பெட்டி, பேன், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை உபயோகிக்கும் நடுத்தர குடும்பத்தினரின் மின் உபயோகம், சர்வசாதாரணமாக 500 யூனிட்டை தாண்டும். தமிழக அரசே இத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கும் நிலையில், அவர்களையும் மின் கட்டண உயர்வு கடுமையாகப் பாதிக்கும். விவசாயத்திற்கு மின் கட்டணம் ஏழு மடங்கு கூடியுள்ளது. ஆனால், அவற்றை அரசே மானியமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.- -

-DINAVIDIYAL!