HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 22 April 2012

மைக்கேல் ஜேக்சனின் இளைய மகனுக்கு பிரிட்டனை சேர்ந்த ஒருவர் உரிமை கோரியுள்ளார்

பிரபல ஆங்கில பொப் இசை பாடகர் மறைந்த மைக்கேல் ஜேக்சனின் இளைய மகனுக்கு “நான் தான் தந்தை” என பிரிட்டனை சேர்ந்த முன்னாள் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
உலக புகழ் பெற்ற பொப் இசை பாடகர் மைக்கேல் ஜேக்சன் கடந்த, 2009ம் ஆண்டு அதிக அளவில் போதை மருந்து செலுத்தப்பட்டதால் மரணமடைந்தார். இவரது இளைய மகன் பிரின்ஸ் மைக்கேல். தற்போது இவனுக்கு 10 வயதாகிறது.
பிரிட்டனை சேர்ந்த முன்னாள் பாதுகாவலர் மாட் பிடெஸ். இவர் கடந்த 2001ல் மைக்கேல் ஜேக்சனுக்காக விந்து தானம் அளித்ததாகவும் இதை தொடர்ந்து 2002ல் பிரின்ஸ் பிறந்ததாகவும் மரபணு ரீதியாக பார்க்கும் போது பிரின்சுக்கு நான் தான் உண்மையான தந்தை எனவே அவனை பார்க்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஜேக்சன் பெற்றோரிடம் கோரியிருந்தார்.
ஆனால் இது தொடர்பாக அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.இதையடுத்து பிரின்சின் தந்தை என நிரூபிக்கும் வகையில் மரபணு பரிசோதனை நடத்துவதற்கு வசதியாக சட்ட உதவியை மாட் பிடெஸ் நாடியுள்ளார்.

-DINAVIDIYAL!