HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

இந்தியத் தலைவர்களின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கையே இருந்தது இல்லை: அக்யூஸ்ட் டக்ளஸ்

யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மீது தமக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்று இலங்கை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்தியா சென்ற எம்.பிக்கள் குழு யாழ்ப்பாணத்தை பார்வையிட்டு வெளியேறிய பின்னர் நேற்று தமது கட்சி அலுவலகத்தில் டக்ளஸ் தேவானந்தா நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய அரசாங்கமானது 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் 3 ஆண்டுகளில் இன்னும் ஆயிரம் வீடுகளைக் கூடக் கட்டித்தரவில்லை. அப்படியானால் 49 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ?

இந்தியத் தலைவர்களின் வாக்குறுதிகள் மீது எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை.

தமிழகம் மீது படையெடுப்பு?

இதேபோல் தமிழக மீனவர்கள்தான் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கின்றனர். இதற்கு ஒரு தீர்வு காண திட்டமிட்டிருக்கிறேன்.

ஆயிரம் படகுகளில் ஐந்தாயிரம் மீனவர்களை ஏற்றிக் கொண்டு தமிழகம் சென்று மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன். அப்படிப் போவதற்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது பயணம் தொடர்பாக தந்தி கொடுத்துவிட்டு செல்வேன்.

இலங்கையின் வடக்குப் பகுதிகளான பருத்தித் துறை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய இடங்களிலிருந்து தமிழகம் நோக்கிய பயணத்தை தொடங்கப் போகிறேன் என்றார் டக்ளஸ் தேவானந்தா.

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட போர்க் குற்ற விசாரணைக் குழுவே இவரது கட்சியையை ஒரு கூலிப்படையாகத்தான் சித்தரிக்கிறது. இந்த டக்ளஸ் தேவானந்தாவைத்தான் நம்மூர் காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், ஈழத்து எம்.ஜி.ஆர். என சிலாகித்து விட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிற டக்ளஸ் தேவானந்தா பேச்சுவார்த்தைக்கு வருகிறாரா? இல்லை மிரட்டல் விட்டுப் பார்க்கிறாரா? என்பது தொடர்பாக தமிழக அரசு "நல்ல" முடிவு எடுக்கும் என்றே தெரிகிறது.-DINAVIDIYAL!