HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

மாணவர்கள் பிட் அடிக்க உதவிய கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் : தி.மலையை தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் தில்லுமுல்லு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மாணவர்கள் பிட் அடிக்க உதவியதாக கல்லூரி முதல்வரை சஸ்பெண்ட் செய்ய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் 75 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்படுகின்றன. இவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த 11ம் தேதி முதல்  நடந்து வருகிறது.  தேர்வு நடக்கும் கல்லூரியின் முதல்வர் தேர்வு மைய கண்காணிப்பாளராகவும், பெரியார் பல்கலை. சார்பில் நியமிக்கப்படும் பேராசிரியர் துணை கண்காணிப்பாளர £கவும் இருந்து தேர்வை நடத்துவது வழக்கம். இந்நிலையில், தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செரூ.யன் நேரில் சென்று ஆய்வு  செய்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரியில் உள்ள சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.  அப்போது,  அங்கு புத்தகத்தை பார்த்தும், பிட் வைத்தும் தேர்வு எழுதிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களை கையும், களவுமாக பிடித்தார். அத்துடன் அந்த இரு மாணவர்களும் தேர்வு  அறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்கள் வைத்திருந்த புத்தகம் மற்றும் பிட் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், தேர்வறை கண்காணிப்பாளர் சின்னராஜ், அக்கல்லூரி முதல்வர் ஆறுமுகம் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பல்கலைக் கழகத்தின் சார்பில்  துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியை ஆர்த்தி அப்போது தேர்வு மையத்திலேயே இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து தேர்வறை கண்காணிப்பாளர், கல்லூரி முதல்வர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு துணைவேந்தர் உத்தரவிட்டார். திருவண்ணா மலையை தொடர்ந்து கிருஷ்ண கிரியிலும் தில்லுமுல்லு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

சோதனை தொடரும் : பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துசெரூ.யன் கூறுகையில், ‘‘தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் அதிரடி சோதனை நடத்த உள்ளோம். இதற்காக 12  பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது,‘‘ என்றார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-DINAVIDIYAL!