பிரிட்டிஷ் ராணி எலிசபெத் 2013 புத்தாண்டு தினத்தில் கௌரவ விருது அளிக்க உள்ளோரின் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் ராம்பிரகாஷ் உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரிட்டன் குடிமக்களுக்கு ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் "ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்' என்ற கௌரவ விருதுகளை ராணி எலிசபெத் வழங்குவது வழக்கும். வரும் (2013) புத்தாண்டு தினத்தில் இவ்விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளோரின் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சார்பில் 1991 முதல் 2001ஆம் ஆண்டு வரை விளையாடிய இந்திய வம்சாவளி வீரர் மார்க் ராம்பிரகாஷ் இடம்பெற்றுள்ளார்.
இவரைத் தவிர, மகப்பேறியல் நிபுணர் கீதா நாகசுப்ரமணியன், வீணா மேயர், மிருதுள் ஹெக்டே உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் 22 பேருக்கும் இவ்விருது வழங்கப்பட உள்ளது.-DINAVIDIYAL!