HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 1 January 2013

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த அறிக்கை உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த அறிக்கை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

மூன்று தினங்கள் இடம்பெற்ற இந்த மாநாடு கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பான அறிக்கை ஒன்றை மாநாட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

யுத்த வலய மக்களின் நிலைமை, அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு, யாழ்ப்பாண மாணவர்களின் கைது, காணிப்பிரச்சினை, தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்தியா, அவுஸ்ரேலியா, மியன்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-DINAVIDIYAL!