HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 1 January 2013

ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து ‘புதிய வாழ்வையும், வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும்’

2013–ம் ஆண்டு புதிய வாழ்வையும், வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும் என்று தமிழக மக்களுக்கு ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்தி செய்தியில் கூறியிருப்பதாவது:–
ஆக்கப்பூர்வமான திட்டங்கள்
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்பதும், மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய வேண்டும் என்பதும் உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசின் குறிக்கோளாகும். அதனை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
இனிதாக மலரட்டும்
அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே, ஒரு நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை பெற முடியும். எல்லாரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற எனது அரசின் குறிக்கோளை அடையும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
மலரும் புத்தாண்டு, புதிய வாழ்வையும் வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

-DINAVIDIYAL!