HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

பிரதமர் ஆகும் கனவு இல்லை: குஜராத் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் - மோடி

அகமதாபாத், செப். 5-

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. நரேந்திர மோடியும் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகிறார். 

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் மோடியைப் பார்த்து, ‘விரைவில் பிரதமராகி இங்கு வந்து உரையாற்றுவீர்களா?’ என்று கேள்வி எழுப்பினான். 

இதற்குப் பதில் அளித்த மோடி, “யாராவது போல் ஆக வேண்டும் என்று கனவு காண வில்லை. ஆனால், ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவு உண்டு. குஜராத் மக்களுக்கு 2017ம் ஆண்டு வரை தொடர்ந்து சேவை செய்வேன்” என்றார். மோடி இவ்வாறு கூறியிருப்பதன் மூலம், பிரதமர் ஆகும் அவரது கனவு சிதைந்துவிட்டது என்றும், அவரை பிரதமர் ஆக்க நினைத்த பா.ஜனதா கட்சியும் சிதைந்துவிடும் என்றும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.-DINAVIDIYAL!