தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜனா(வயது 35). இவரது மனைவி மூனுசா(30)(இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).
திருமணம் முடிந்ததும் கணவன்–மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூனுசா மட்டும் தஞ்சைக்கு வந்து வாண்டையார் இருப்பில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார்.இந்த நிலையில் வாண்டையார் இருப்பு தெற்கு தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுப்பிரமணியன்(40) என்பவர், தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி தஞ்சை தாலுகா போலீசில் மூனுசா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனி முகமது அப்துல் ரகீம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை 2–வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுப்பிரமணியனை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்DINAVIDIYAL!