டெல்லி: அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நாள்தோறும் ரூ 10 கோடி இழப்பை சந்தித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அஜித்சிங் அளித்த பதில்:
கடந்த மார்ச் 15 வரை பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் இருந்து ஏர் இந்தியா ரூ 574.67 கோடி வசூலித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ரூ 114.35 கோடியும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரூ 212 கோடியும் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து ரூ 112.98 கோடியும் ஏர் இந்தியா நிறுவனம் வசூலித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனமானது நாள்தோறும் ரூ10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது என்றார் அவர்
-DINAVIDIYAL!