HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 28 March 2012

முதல் பருவ பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியீடு-27-03-2012

சென்னை: வரும் கல்வியாண்டுக்கான, ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு, முதல் பருவ பாடத்திட்டங்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பதிப்பாளர்கள், தங்களுடைய புத்தகங்களை, ஏப்., 20ம் தேதி வரை அனுப்பி வைக்கலாம். மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக, ஒரு ஆண்டுக்கான பாடப் புத்தகங்களை, மூன்று பிரிவாக பிரித்து, தனித்தனியாக அச்சிட்டு வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், இந்த முறையில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இரண்டாவது கட்டத்தில், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக, எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்தி, அவற்றை மூன்று பிரிவுகளாக அச்சிடும் பணி நடந்து வருகிறது.

வகுப்பு வாரியாக, முதல் பருவ பாடத்திட்டங்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரக இணையதளத்தில் (www.dtert.tn.nic.in) பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடங்களுக்கு, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பிற்கு முழு ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெற விரும்பும் பதிப்பகங்கள், பாடப் புத்தகங்களின் இரு நகல்களை, ஏப்., 20ம் தேதிக்குள், &'உறுப்பினர் - செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என, பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.-DINAVIDIYAL!