HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 27 March 2012

என்.டி.பி.சி. நிறுவனம், பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என 35 பொறியியல் மாணவர்களை தேர்வு செய்து ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

பாடப்பிரிவு : பொறியியல்
வழங்குபவர்கள் : என்.டி.பி.சி.
சமூக நோக்கோடு, படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது என்.டி.பி.சி. முழு நேர படிப்பாக பொறியியல் படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.
உதவித் தொகை பெறத் தகுதி  : எஸ்.சி./எஸ்.டி., அல்லது உடல் ஊனமுற்ற அல்லது கிராமத்தில் வாழும் மாணவர்கள், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பொறியியல் துறையில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கும் மூன்றாமாண்டு மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
2009ல் முதல் ஆண்டையும், 2010ல் இரண்டாம் ஆண்டையும் எந்த அரியர்சும் இல்லாமல் தேர்ச்சி பெற வேண்டும். வேறு எந்த உதவித் தொகையும் பெறாத மாணவராகவும் இருக்க வேண்டும்.
உதவித் தொகை : இரண்டாமாண்டில் இருந்து இறுதி ஆண்டு வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். 20 எஸ்.சி., 10 எஸ்.டி. மாணவர்களுக்கும், 5 உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இதற்கு தகுதியான மாணவர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழை இணைத்து அவரவர்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிலையம், இந்த உதவித் தொகையை பெற மாணவர் தகுதியானவர் என்பதை உறுதி செய்து நிறுவனத்திற்கு அனுப்பும்.-DINAVIDIYAL!