HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 27 March 2012

தமிழக பட்ஜெட்: கல்வித்துறைக்கு ரூ.14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2012-13ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் மார்ச் 26ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார்.

இதில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

* 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம்

* பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா 4 ஜோடி சீருடைகள்

* 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விலையில்லாக் காலணிகள்

* 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு இலவச புத்தகப்பைகள்

* 6ம் வகுப்பு முதல் 10௦ம் வகுப்பு வரை இலவச வடிவியல் பெட்டி(Geometry box)

இதுவரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ.14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார்.  -DINAVIDIYAL!