HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி : தமிழகத்தின் மின் பற்றாகுறையை போக்க, மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க திட்டம் ஏதுமில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கியதும் தமிழகத்தின் மின்பற்றாக்குறை முடிவுக்கு வரும் எனவும் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்தார்.
 
இதற்கு முன் டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மின்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்ற அதிமுகவை சேர்ந்த எம்.பி ஓ.எஸ்.மணியன் தமிழகத்தில் 100 சதவீத கிராமங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளதாகவும் தற்போது நிலவும் கடும் மின்வெட்டை முழுவதுமாக குறைத்து தமிழ்நாட்டை மீண்டும் மின்வளம் நிறைந்த மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார். பிரதமரை நேரில் சந்தித்த போது இதற்காக தமிழகத்திற்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து உடனடியாக 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்தார்.

இந்த 1,000 மெகாவாட் மின்சாரத்தை கூடங்குளம் அணு மின் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியதும் அதிலிருந்து முதலாவதாக உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இக்கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுஷில்குமார் மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
-DINAVIDIYAL!