HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேது சமுத்திர திட்டத்தை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் 'நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் போது மத நம்பிக்கைகள் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுப்படுத்தியுள்ளது. சில சக்திகள் புனையும் கற்பனை கதைகளுக்கு செவிசாய்க்காமல், சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்து, சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிரான வழக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டிற்காக முறையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே சில சக்திகள், இராமர் பாலம் என்ற ஒன்று இருப்பதாகவும், இவர்கள் கூறும் இந்த கற்பனையான அமைப்பான இராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த சக்திகள் தமிழர்களின் நூற்றைம்பது ஆண்டு கால கனவுத் திட்டமான சேதுக சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்க நினைப்பது தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே அமையும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்' என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.     -DINAVIDIYAL!