HAPPY PONGAL WISHES
Thursday, 29 March 2012
அமைதித் திட்டத்தை ஏற்றது சிரியா
சிரியாவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரச் செய்யும் கோஃபி அன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ நா மற்றும் அரபு லீக்கின் தூதராக செயல்படும் கோஃபி அன்னானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எதிர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை கோஃபி அன்னானின் திட்டத்தில் அடக்கம்.
இந்தத் திட்டத்தின் வெற்றி அது எந்த அளவுக்கு முறையாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று கோபி அன்னானின் பேச்சாளர் கூறியுள்ளார்.
சிரியாவில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர அரபு லீக் எடுத்த முயற்சிகள் பயன்தரவில்லை.
ஐ நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் கோஃபி அன்னானின் திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு அளித்துள்ளமையால் இந்த திட்டத்தை சிரிய அரசு ஏற்கும் நிலை ஏற்பட்டது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். -DINAVIDIYAL!