HAPPY PONGAL WISHES
Thursday, 29 March 2012
கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds ஆகும்.
பலரின் பொழுது போக்கு அம்சமாகவும் திகழும் விளையாட்டே இதுவாகும்.
உலகம் முழுவதும் 700மில்லியன் முறை இந்த விளையாட்டு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவே வரலாற்றில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டாகவும் திகழ்கின்றது.
இந்த விளையாட்டில் பல தொகுப்புகள் வெளியாகிவிட்டன.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதன் புதிய தொகுப்பான ' Angry Birds Space' வெளியாகியுள்ளது.
அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிப் பாவனையாளர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
அப்பிள் பாவனையாளர்கள் ஐ டியூன்ஸ் ஊடாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
கணனி மற்றும் மெக் பாவனையாளர்களும் புதிய தொகுப்பினைத் தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
இது முன்னைய தொகுப்புகளை விட வித்தியாசமான அனுபவத்தினைத் தரும் என இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
-DINAVIDIYAL!