HAPPY PONGAL WISHES
Thursday, 29 March 2012
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம்
மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த வேலை நீக்க உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா, மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்த அரசு உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள நலப்பணியாளர்களை உடனடியாக வேலையில் சேர்க்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் இன்னும் அவர்களுக்கு பணி ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. மக்கள் நலப்பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தால், தங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுகுணா முன் விசாரணைக்கு வந்தது. மக்கள் நலப்பணியாளர்களால் தொடரப்பட்ட இந்த வழக்கு தலைமை வழக்கறிஞர் ஆஜராகாததால் கால அவகாசம் கொடுக்கப்பட்டு இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வாதம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மக்கள் நலப்பணியாளர்கள் எந்த ஒரு இட ஒதுக்க்கிடும் செய்யப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தேர்வாணையம் மூலமும் நியமிக்கப்படவில்லை எனறு விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் இந்த விவாதத்தை நீதிபதி சுகுணா ஏற்க மறுத்தார்.
இதுகுறித்து நீதிபதி கூறும்போது, மக்கள் நலப்பணியாளர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படாதது குறித்து 4 வாரங்களுக்குள் அரசு விளக்கமளிக்க வேண்டும் என கூறி அரசின் மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-DINAVIDIYAL!