-DINAVIDIYAL!
கொழும்பு: நல்லிணக்க நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் அமைதியை நிரந்தரமாக நிலைநாட்ட, அந்நாட்டு அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும், இதுகுறித்து யாருடைய அறிவுரையும் வழிகாட்டுதலும் தமக்குத் தேவையில்லை என்றும், அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சமீபத்தில் நடந்த ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19 வது கூட்டத் தொடரில், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதில் இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியா செய்த பங்கு குறித்து இலங்கை நன்றி பாராட்டவும் இல்லை. இந்நிலையில் இதுகுறித்து அதிபர் ராஜபக்ஷே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தனது சொந்த தியாகத்தால் இலங்கை தற்போது அமைதியை நிலைநாட்டும் பாதையில் பாதியில் உள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதையில் இலங்கை சென்று கொண்டிருக்கிறது. இது இலங்கை மக்களுக்காக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள உறுதி. இதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பிறர் சொல்லவேண்டியதில்லை என்றார்.