சமாதானப் பேச்சுக்களுக்காக அரபு லீக் தலைவர்கள் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஒன்று கூடியிருக்கும் நிலையில் ஐ.நா. அரபு லீக் கூட்டாக முன்வைத்த சமாதான திட்டத்தினை உடனடியாக சிரிய அரசு அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்க அழுத்தம் கொடுத்துள்ளது. முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானின் மத்தியஸ்தத்துடன் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டமானது ஐ.நா. கண்காணிப்புடன் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருதல், எதிரணியினரின் நகரங்களிலிருந்து அரச துருப்புக்களை வாபஸ் பெறச் செய்தல் மற்றும் மனித நேய பணிகளுக்கான அனுமதி ஆகியவற்றினை வலியுறுத்துகின்றது.
இத் தீர்வுத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு சிரியா இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் பாக்தாத்தில் நடைபெறும் அரபு லீக் நாடுகளின் சந்திப்பில் சிரிய விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
20 வருடங்களில் முதற் தடவையாக பங்களாதேஷில் அரபு லீக்கின் உச்சி மாநாடு இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை கொபி அனானின் தீர்வுத் திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் வலியுறுத்தியுள்ளார்.
நேரத்தை வீணடிப்பதற்கு எந்தவொரு அவகாசமும் இல்லை . சிரியாவில் நிரந்தர அமைதியினை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையே இதுவெனவும் பான் கீ மூன் கூறியுள்ளார். கொபி அனானின் தீர்வுத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விவாதங்களில் பான் கீ மூன் கலந்து கொள்ளவுள்ளார்.
-DINAVIDIYAL!