HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

அன்னா ஹசாரே குழுதான் கிரிமினல்களின் கூடாரம் : முலாயம்சிங் பதிலடி

புதுடெல்லி : சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் , அன்னா ஹசாரே குழுவிற்கு இன்று பதிலடி கொடுத்துள்ளார். அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி  தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலளித்து பேசிய முலாயம்சிங் ' அன்னா ஹசாரே குழு கிரிமினல்களின் கூடாரமாக இருக்கிறது , மேலும்  ஹசாரே குழுவை சுற்றிலும்  ஊழல்வாதிகளும் குற்றப்பின்னணி உள்ளவர்களுமே நிறைந்திருக்கின்றனர் என்று கூறினார்.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசிவரும் ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவாலுக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவால் கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் தீர்மனம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.       -DINAVIDIYAL!