HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

சச்சினால் தான் கிரிக்கெட் விளையாடினேன் : கோஹ்லி

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பில், மும்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய விராட் கோஹ்லி கூறியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது, சச்சின் டெண்டுல்கரை நேரில் பார்க்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. சச்சினின் 
விளையாட்டை பார்த்த பிறகு தான் எனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீதே ஒரு ஆர்வம் பிறந்தது. தற்போது, அவருடன் இணைந்து விளையாடுகிறேன் 
என்பதை நினைத்து பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனது ரோல் மாடல் சச்சின் என்பதை நான் பெருமையாக சொல்வேன். நான் மட்டுமல்லாது, 
என்னைப் போன்ற இளைய தலைமுறையினர் அனைவருக்கும் சச்சின் டெண்டுல்கர் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார் என விராட் கோஹ்லி கூறினார்.   -DINAVIDIYAL!