-DINAVIDIYAL!
உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர், கடல்வாழ் ஆய்வு குறித்தும் ஆழ்கடலில் சுமார் 12 கி.மீ. தூரம் பயணம் செய்து ஆய்வு நடத்தி திரும்பி சாதனை படைத்துள்ளார். டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன்,57. இவர் 3-டி தொழில்நுட்பத்துடன் இரு படங்களை இயக்க உள்ளார். இதற்காக ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
கவுவாம் தீவு அமைந்துள்ள மேற்கு பசிபிக் கடல் 200 மைல் ஆழம் கொண்டது. நேஷனல் ஜியோகிரபிக் சொசைட்டி படக்குழுவினரின் ஒத்துழைப்புடன், இங்குள்ள, மரியானா டிரென்ஞ்ச் கடலில் 7 மைல் (12 கி.மீ.) தூரம் தனியொரு ஆளாக பயணித்தார், அதாவது 35,766 அடி ஆழ்கடலில், பன்முக 3-டி கேமிராவுடனும், 8 அடி நீளம், 6 அடி அகலம்கொண்ட சிறிய கேப்சூல் வாயிலா இவர் பயணம் மேற்கொண்டார். கடல்வாழ் உயரினங்கள் குறித்து ஆய்வு செய்த பின் 70 நிமிடத்தில் கரைக்கு திரும்பியதாக நேசனல் ஜியேகிரபிக் செசைட்டியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது போன்று யாரும் இவ்வளவு தூர ஆழ்கடலில் பயணித்ததில்லை எனவும் இது ஒரு சாதனை எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 1960-ல் சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த ஜாக்ஸ்பிக்கார்டு மற்றும் டான்வால்ஷ் என்ற அமெரிக்க கப்பல்படை அதிகாரி ஆகியோர் ஆழ்கடலில் பயணித்தனர். இவர்களது சாதனையை கேமரூன் முறியடித்துள்ளார். முன்னதாக ஆழ்கடலில் பயணிக்கும் முன்பு பாப்புவா நியூகினியா நாட்டில் ஒரு மாதம் பயிற்சி மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.