HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 25 March 2012

சோனி நிறுவனத்தி​ன் அதிநவீன வீடியோ றெக்கோர்டர்

இலத்திரனியல் உற்பத்தியில் மக்களின் நம்பிக்கையை வென்ற ஜப்பானிய நிறுவனமான சோனி நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனது வீடியோ றெக்கோர்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற வேகமாக இடம்பெறும் நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்யக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ றெக்கோர்டர் அதி உயர் பிரிதிறனைக் 2.7 அங்குல கொண்ட தொடுதிரை வசதியை கொண்டுள்ளது.
இதில் 5.1 மெகாபிக்சல் கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன் 1080 பிக்சல் பிரிதிறன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யமுடியும். மேலும் 16 அடி ஆழம் வரையான நீரிற்குள் பாதுகாப்பாக இருக்கக்கூடியது. எனினும் இதனை விட ஆழம் அதிகரிக்கும்போது நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதில் காணப்படும் 4GB நிலையான நினைவகம் மூலம் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு வீடியோப் பதிவை மேற்கொள்ள முடியும். இதன் பெறுமதி 179.99 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது-dina vidiyal .