HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 25 March 2012

இருபது-20 உலக கிண்ண தொடருக்கான நுழைவுச்சீட்டு விற்பனை

வீரகேசரி இணையம்  3/25/2012 2:44:19 PM-சர்வதேச இருபது-20 உலக கிண்ண தொடரின் நுழைவுச்சீட்டு விற்பனைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் உபாலி தர்மதாஸ, பிரதித் தலைவல் அசங்க செனவிரத்ன ஆகியோர் முன்னிலையில் டிக்கெட் விற்பனை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

12 அணிகள் பங்கேற்கும் சர்வதேச இருபது-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் அக்டோபர் 7-ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகள் இந்த போட்டியில் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்ய தகுதி சுற்று போட்டி துபாய், அபுதாயில் நடைப்பெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட தகுதி சுற்றில் அயர்லாந்து ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-dina vidiyal .