மாநிலத்தில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநிலத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 2012-2013ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என்றும் இதற்காக முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைய மாநில சரிநிகர் வளர்ச்சி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சூரிய சக்தியுடன் கூடிய வீடுகள் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 548 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சென்னையில் 150 கோடி ரூபாயில் போக்குவரத்து ஒருங்கிணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு புதிய திட்டம், பெண்களுக்கு சமவாய்ப்பு – மாவட்ட தொழில் மையங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவி மையம் உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன-DINAVIDIYAL!
