-DINAVIDIYAL!
புதுடெல்லி, பிப்ரவரி 27- லண்டன் ஒலிம்பிக், ஹாக்கி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. முன்னதாக நேற்று நடந்த தகுதிச் சுற்றுக்கான இறுதிச் சுற்றில் பிரான்சை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 27-ஆம் தேதி லண்டனில் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதற்கான ஹாக்கி போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. இவ்வாட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கிய பிரான்ஸ் தோல்வியைத் தழுவியதால், இந்திய அணி ஒலிம்பிக்கில் களமிறங்கும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது.