HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 29 March 2012

திருச்சியில் மாஜி அமைச்சர் நேரு தம்பி கொலை ; கொலை நடந்தது ஏன்., திடுக்கிடும் தகவல்


-DINAVIDIYAL!திருச்சி: திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
செல்வாக்கு உள்ளவர்: திருச்சி தில்லை நகரில் வசித்து வருபவர் ராமஜெயம் ( 50 ) .இவர் எம்.பி.ஏ., பட்டதாரி. நேருவின் இளைய சகோதரர் ஆவார். நேரு அமைச்சராக இருந்த நேரத்தில் ராமஜெயம் தான் முழு பொறுப்பாக அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார். நேருவின் பல சொத்துக்களையும் இவரே நிர்வகித்து வந்தார் . பொதுமக்கள் பிரச்னைகளை கவனிப்பது மற்றும் கட்டப்பஞ்சாயத்துகள் செய்வது இவரது வேலையாக இருந்து வந்தது. ஆட்சி மாறியதும் இவர் கல்லூரி மற்றும் தொழில் பணிகளில் மட்டுமே அக்கறை காட்டினார்.
இந்நிலையில் காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கல்லணை அருகே திருவளர்சோலை அருகே காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. இவரது உடலை கைப்பற்றிய போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு தி.மு.க.,வினர் குவிந்திருப்பதால் பதட்டம் நிலவி வருகிறது.