HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

லட்சங்களில் சம்பளம் தரும் பேஷன் கம்யூனிகேஷன்

உலக வேலைவாய்ப்பு சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பேஷன் டெக்னாலஜி, பேஷன் கம்யூனிகேஷன் சார்ந்த படிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப உள் நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால் அவற்றை முதன்மைப்படுத்த இத்துறைகள் உதவுகின்றன. இதற்கு பேஷன் கம்யூனிகேஷன் துறையினர் சரியான ஆட்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்கள் வடிவமைப்புத் துறையின் பல்வேறான    அம்சங்களில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். பேஷன் கம்யூனிகேஷன் துறையில், 3 வருட இளநிலைப் பட்டப்படிப்பை நொய்டாவில் உள்ள சத்யம் பேஷன் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனம் வழங்குகிறது. பேஷன் வணிகம், சில்லரை வணிகம், இதழியல் துறையின்  தகவல் தொடர்பு பிரிவு, செய்தித்தாள், தொலைக்காட்சி சார்ந்த பணிகளில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு இப் படிப்பு ஏற்றதாக உள்ளது. மேலும்  வடிவமைப்பு, தொழில்நுட்ப வரைதல், பேஷன் படிப்புகள், சந்தைப்படுத்துதல் கொள்கைகள், பேஷன் ஸ்டைலிங், பேஷன் ஜர்னலிசம் மற்றும் போர்ட்போலியோ மேம்பாடு ஆகியவற்றின் அடிப் படைகளை கொண்டுள்ளது.

புதிய தயாரிப்புகளை அறி முகப்படுத்துதல், ஸ்டோர் நிகழ்வு கள், கேட்வாக் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், உள்ளிட்ட பல அம்சங்களையும் இப்படிப்பு உள்ளடக்கி உள்ளது. பேஷன் கம்யூனிகேஷன் துறையில் 4 வருடப் படிப்பை ழிமிதிஜி கல்வி நிறுவனம் வழங்குகிறது. Visual     Merchandising, Styling, Graphic design, Display and Exhibit Design, Advertising, Public Eelations, and Creative Writing உள்ளிட்ட பலவிதமான துறைகளை இப்படிப்பு உள்ளடக்கி உள்ளது. இந்தப் படிப்பை முடித்தபிறகு, Marketing, Management, Entrepreneurship, Broadcast Production, Fashion Journalism, Reporting and Editing, Fashion Advertising, Public Relations, Publicity, Visual Merchandising, Store Planning, Special Event Coordination   and Fashion Photography போன்ற ஏராளமான துறைகளில் மாணவர்களால் ஈடுபட முடியும். பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் தொழில்துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வெற்றிகளையும் பெற முடியும். திறமைக்கேற்ப லட்சங்களில் வருவாயையும் ஈட்ட வாய்ப்புகள் நிறைய உள்ளன. இப்படிப்புகளில் சேர அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+2 என்ற அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.-DINAVIDIYAL!