-DINAVIDIYAL!
இந்தியாவில் பணக்கார நகரங்களின் வரிசையில் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் முதலிடம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மும்பை நகரம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக நுகர்வோர் விலை குறியீடு குறித்த ஆய்வின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலை குறியீடு என்பது தனி மனிதனின் உணவு, உடுத்தும் உடை, பயன்படுத்தும் போக்குவரத்து போன்றவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுவது. இந்தக் கணக்கெடுப்பில் தலைநகர் டில்லி நகரம் மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளது. இதே கருத்தை பாரத் பெற்றோலியம் ஒப்புக்கொள்கிறது.
பெங்களூர் நகரத்தில் சமையல் காஸ் ஒன்றி்ன் விலை 415 ரூபா, கொல்கத்தாவில் 404, மும்பையில் 402, புதுடெல்லியி்ல் 399, சென்னையில் 393.50 என வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடிப்படை தேவைகளுக்கான பொருட்களின் விலை உயர்வு மாதந்தோறும் உயர்வது சகஜமாகி விட்டதாக கூறுகின்றனர் பெங்களூர் நகரவாசிகள்.
அதேசமயம் மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் ஊதியத்தில் சுமார் 40 சதவீத அளவு வரை வீட்டு வாடகைக்காகச் செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ___