HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday, 30 March 2012

கூடங்குளம் அணு உலை இரண்டு மாதங்களில் இயங்கும்

-DINAVIDIYAL!

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் முதல் உலைக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின் நிலையங்களை இயக்குவது மக்கள் போராட்டம் காரணமாக பல மாதங்கள் தள்ளிப்போய் உள்ளது.
தமிழக அமைச்சரவை அணுமின் நிலையப் பணிகளைத் துவங்கலாம் என்று அனுமதி அளித்த அடுத்த நாளில் இருந்து அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அந்தப் போராட்டம் கடந்த செவ்வாய் கிழமைதான் கைவிடப்பட்டது. அணு உலையை இயக்கும் பணிகள் தற்போது துவங்கினால் மின் உற்பத்தி எப்போது துவங்கும் என்று அணுசக்தித் துறை இதுவரை தேதி அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் கடும் மின் வெட்டு நிலவி வரும் நிலையில், கூடங்குளம் மற்றும் தற்போது செயல்படுத்தப்படும் பிற அனல் மின் திட்டங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் மாநிலத்தின் மின் சூழல் முன்னேற்றமடையும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
திங்கள் கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் வரவு செலவுத் திட்டத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்று ஒரு உறுப்பினர் கேட்டதற்கே முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு பதிலளித்துள்ளார்.