HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

கூகுள் முன்னாள் சிஈஓ சம்பளம் 1 மில்லியன் டாலரிலிருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்தது!

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் தற்போதைய செயல் தலைவருமான எரிக் ஸ்மித்தின் ஆண்டு ஊதியமானது 1 மில்லியன் டாலரில் இருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2010-ம் ஆண்டில் அவர் 1 மில்லியன் டாலர் பெற்றிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் 1.25 மில்லியன் டாலர் அவருக்கு கிடைத்தது.

கூகுள் நிறுவனத்தில் ஸ்மித்துக்கு அடுத்த நிலையில் ஊதியம் பெறுவோரைவிட இது 4 மடங்கு அதிக உயர்வு. கூகுளின் மற்றொரு நிறுவனரான லர்ரி பேஸ் இப்பொழுது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அதேபோல் நிறுவனர்களில் மற்றொருவர் செர்ஜி பெயின். இருவரும் பெறும் தொகையைவிட இது கூடுதலாகும். இருவரும் தமது சொத்துகளின் பெரும்பகுதியை நேரடியாக கூகுளின் பங்குகளில் இணைத்திருக்கின்றனர்.

ஸ்மித் பொறுப்பேற்ற பிறகு கூகுள் தேடுதளமானது முன்னைவிட கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளது. அவரால் தோராயமாக 38 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை கடந்த ஆண்டு உருவாக்க முடிந்திருக்கிறது.

ஸ்மித்துக்கு அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியம் பெறுபவர் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரி நிகேஷ் அரோரா. 2010-ம் ஆண்டு 22.6 மில்லியன் டாலர் பெற்றிருந்த அவர் கடந்த ஆண்டு 23.2 மில்லியன் டாலரைப் பெற்றிருக்கிறார்.
-DINAVIDIYAL!