HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 21 April 2012

13000 ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை: என்எல்சி வேலை நிறுத்தம் தொடங்கியது

நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் எனும் என்.எல்.சி. நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.

இந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனை நிறைவேற்ற வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சமீபத்தில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து புதுவையில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனவே, நேற்று மாலை நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணி நடந்தது. அதன் முடிவில் இன்று முதல் (21-ந் தேதி) காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் நெய்வேலியில் வழக்கத்துக்கு மாறாக ஆட்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக்கையொட்டி என்.எல்.சி. நிறுவனம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு என்.எல்.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமான தொ.மு.ச. (திமுக) ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-DINAVIDIYAL!