-DINAVID
சென்னை, ஏப். 9 : தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின்படி சமச்சீர் கல்வி முறையில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று காலை நடந்த தமிழ் இரண்டாம் தாள் வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் நடந்த தமிழ் முதல் தாளும் எளிதாக இருந்தது என்றும், இரண்டாம் தாளும் நன்கு தெரிந்த வினாக்களாக அமைந்திருந்தன என்று பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வெழுதிய மாணவ, மாணவியர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்ச மாணவ, மாணவியர் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.