HAPPY PONGAL WISHES
Monday, 9 April 2012
டீலர்களை வந்தடைந்த மாருதி எர்டிகா: 12ந் தேதி முதல் விற்பனை
இந்த ஆண்டின் அதிக வரவேற்பை பெறப்போகும் மாடலாக கருதப்படும் மாருதி எர்டிகா வரும் 12ந் தேதி முறைப்படி விற்பனைகக்கு வர நிலையில், தற்போது ஷோரூம்களை வந்தடைந்துள்ளது.
சிறிய கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் மாருதி தற்போது தன்னை அடுத்த லெவலுக்கு தயார் படுத்திக்கொள்ள முனைந்துள்ளது. இதற்காக, எம்பிவி கார் மார்க்கெட்டிலும் எர்டிகா மூலம் கால் பதிக்க உள்ளது.
வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் ஆவலையும் தூண்டியுள்ள எர்டிகாவை வரும் 12ந் தேதி முதல் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மாருதி அறிவித்துவிட்டது.
மாருதி எர்டிகா பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. மாருதியின் நவீன தொழில்நுட்பம் கொண்ட 1.4 லிட்டர் கே14 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் எர்டிகா விற்பனைக்கு வர உள்ளது.
5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வரும் மாருதி எர்டிகா ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-DINAVIDIYAL!