டி செக்மென்ட்டில் அனைத்து கார்களின் விற்பனையையும் விஞ்சி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது மஹிந்திராவின் புதிய எஸ்யூவி. ஆம், கடந்த மாதம் 3196 புதிய எஸ்யூவியை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்த குளோபல் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. கொடுத்து கட்டுப்படியாகாத அளவுக்கு டிமான்ட் இருக்கிறது. எக்ஸ்யூவியை ஏராளமான வாடிக்கையாளர்கள் தவம் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் டி செக்மென்ட் கார் மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவிதான் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் 3196 எக்ஸ்யூவி விற்பனையாகி இருக்கிறது.
டி செக்மென்ட்டில் கடந்த மாதம் 917 டொயோட்டோ கரோல்லா ஆல்டிஸ் கார்களும், 722 செவர்லே குரூஸ் கார்களும், 336 வோக்ஸ்வேகன் ஜெட்டா கார்களும், ரினால்ட் ப்ளூயன்ஸ் 227 கார்களும், 104 ஹோண்டா சிவிக் கார்களும் விற்பனையாகியுள்ளது.
ஆனால், இவை அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2903 கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி கார்கள் மட்டும் 3196 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.-DINAVIDIYAL!