HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

ஒலிம்பிக்கில் ஷிவா தாபா 18 வயதில் சாதனை

புதுடெல்லி : லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மிக இளம் வயது இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமை ஷிவா தாபாவுக்கு (18) கிடைத்துள்ளது. 
கஜகஸ்தானின் அஸ்டானா நகரில் நடந்து வரும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியின் 56 கிலோ எடை பிரிவு பைனலில் விளையாட இந்திய வீரர் ஷிவா தாபா நேற்று தகுதி பெற்றார். 

அரை இறுதியில் ஜப்பான் வீரர் சடோஷி சிமிஸுவுடன் மோதிய ஷிவா 31,17 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார். இந்த வெற்றியால், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மிக இளம் வயது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. மற்றொரு அரை இறுதியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங் (75 கி. எடை பிரிவு) துரதிர்ஷ்டவசமாக தோற்றார். எனினும், விஜேந்தர் ஏற்கனவே ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.-DINAVIDIYAL!