HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 22 April 2012

இன்ஜி. கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 2வது வாரம் கவுன்சலிங் : 1.5 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்

சென்னை : தமிழகம் மற்றும் புதுச் சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 5,557 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 60,975 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப் படும் என்று தெரிகிறது. எனவே, இந்த கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில், அண்ணா பல்கலைக்கழகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 554 கல்லூரிகளில் 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 48 ஆயிரம் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப் படும். இதற்காக, 2 லட்சம் விண்ணப்பம் அச்சடிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. மே 2வது வாரத்தில் தொடங்கி, மே 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 58 மையங்கள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. இணையதளத்திலும் விண்ணப்பங்களை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப வினியோகத்தை தொடர்ந்து ஜூன் இறுதியில் ஒகேஷனல் பிரிவுக்கான கவுன்சலிங் (தொழிற்கல்வி, விளை யாட்டு,  மாற்றுத் திறனாளிகள்) நடக்கிறது. ஜூலை 2வது வாரத்தில் பொது கவுன்சலிங் தொடங்கும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கிய ஒரு வாரத்துக்கு பின்னரே பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே முறை பின்னப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், ரேங்க் பட்டியல் ஜூன் 24ம் தேதியும் வெளியிடப்பட்டது. ஜூன் 30ம் தேதி தொடங்கிய கவுன்சலிங் 35 நாட்கள் நடந்தது. பொதுப் பிரிவினருக்கு ஜூலை 8ம் தேதி கவுன்சலிங் தொடங்கியது. இந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே, கவுன்சலிங்கை 9ம் தேதி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக, அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-DINAVIDIYAL!