புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் புதிதாக 25 லட்சம் பேர் செல்போன் இணைப்பு பெற்றுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஓராண்டில் அதிகபட்ச மாதாந்திர புதிய இணைப்பு ஆகும். கடந்த மார்ச் மாத இறுதியில் ஏர்டெல் நிறுவன செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.13 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்தனர். கடந்த 2011 மார்ச் மாதத்தில் 32 லட்சம் பேர் புதிய இணைப்பு பெற்ற னர். அதன் பிறகு 2012 மார்ச் மாதத்தில் அதிகம் பேர் புதிய இணைப்பு பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் சராசரியாக மாதத்துக்கு 15 லட்சம் பேர் மட்டுமே புதிய செல்போன் இணைப்பு பெற்ற னர் என்பது குறிப்பிடத்தக்கது.
-DINAVIDIYAL!
-DINAVIDIYAL!