HAPPY PONGAL WISHES
Wednesday, 4 April 2012
2ஜி விவகாரத்தில் பா. சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா?
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைதொடர்பு அமைச்சராக இருந்த அ. ராசா 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஊழல் செய்ததாக குற்றம் சாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி, இந்த 2ஜி அலைக்கற்றை விவகாரம் நடைபெற்றபோது பா. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்ததால், அவருக்கு தெரியாமல் இந்த ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை எனவே, மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்திற்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இதுதொடர்பாக, சிபிஐ கோர்ட்டில் சுப்ரமணியசுவாமி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
அதன்பின், தான் மேற்கொண்ட எந்த வழக்கும் இதுவரை தோல்வியில் முடிந்ததில்லை. எனவே, பா. சிதம்பரத்தின் மேல் உள்ள குற்றத்தை நிரூபித்தே காட்டுவேன் என்று சவால் விட்டிருந்தார் சுவாமி. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பா. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து, அவரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.-DINAVIDIYAL!