புதுடில்லி: தர வரிசை பட்டியலில் டில்லி ஐஐடி நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் உலக அளவில் 218வது இடத்தையும் பிடித்துள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் புரேந்தரேஸ்வரி கூறுகையி்ல் கடந்த 2011-ம் ஆண்டு டைம்ஸ் இதழ் நடத்திய கருத்து கணிப்பில் மும்பை ஐஐடி நிறுவனம் 317-வது இடத்தையும், பெங்களூரூ ஐஐடி நிறுவனம் 321-வது இடத்தையும் பிடித்துள்ளது.
குளோபல் பிசினஸ் ஸ்கூல் 2012 அறிக்கையின் படி ஆசிய பசிபிக் பகுதியில் அகமதாபாத் ஐஐடி நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 43 மத்திய பல்கலைகழகங்களும், 265 மாநில அரசின் பல்கலைகழகங்களும், 80 தனியார் பல்கலைகழகங்களும், 129 நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றது.
இவைகளில் தமிழகத்தி்ல் அதிகபட்சமாக 54 பல்கலைகழகங்களும், உ.பி.,மாநிலத்தில் 48, மகாராஷ்டிரா 41, ஆந்திராவில் 40, ராஜஸ்தானில் 39, கர்நாடகாவில் 35 பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.-DINAVIDIYAL!